இரண்டு கோடி ரூபாய் மதிப்பில்,கொரோனா' மற்றும் பன்றி காய்ச்சலுக்காக நிரந்தர வார்டுகள்அமைக்கப்படுகி

மதுரை: தமிழகத்தில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, 24 மருத்துக் கல்லுாரி மருத்துவமனைகளில், சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. சென்னை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில், கொரோனா பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை, 6 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி நடக்கிறது.ரூ.2 கோடிதற்போது, மதுரை மற்றும் தோப்பூரில், நிரந்தர தனி வார்டுகள் அமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை பழைய செவிலியர் கல்லுாரி கட்டடம், தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனையில், ஒரு கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அங்கு தலா, மூன்று, 'வென்டிலேட்டர், மல்டி பாரா மானிட்டர்' கருவிகள் நிறுவப்பட உள்ளன. கட்டுமான சீரமைப்பு துவங்கி விட்டது.


கொரோனா சிறப்புக்குழு டாக்டர் ஒருவர் கூறுகையில், 'மதுரை, தோப்பூரில் அமையும் நிரந்தர தனி வார்டுகள், கொரோனாவிற்கானது மட்டுமல்ல; இதேபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் நிபா, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்குமானது. 'மதுரையில் 20, தோப்பூரில், 10 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்' என்றார். இதுதவிர, சென்னை, கோவை உள்ளிட்ட, 11 இடங்களிலும் நிரந்தர தனி வார்டுகள் துவங்கப்பட உள்ளன. மருத்துவமனை வளாகங்களில், இதற்கான கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 12.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவர்கள் எனகூறினார்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்
Image
ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்
Image
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் மாவட்ட எல்லைகளில் பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்
Image
நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க.! நம்பிக்கையூட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image